ரேசன் கடையும் அம்மா உணவகமும்தான் மக்களுக்குத் தேவை… புரிகிறதா பொருளாதார மேதைகளே…

ரேஷனில் பொருட்கள் கொடுப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும், அம்மா உணவகம் என்ற பெயரில் பணத்தை வீணாக செலவழிக்க கூடாது என்றெல்லாம் பொருளாதார மேதைகள் வியாக்கியானம் பேசி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.


ஆனால், இப்போது அடித்தட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் தருவதற்கு நம்பிக்கை அளிக்கும் இடம் என்பது கோயிலோ கடவுளோ அல்ல. ஆம், ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்கும் என்பதும், அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு சாப்பிட முடியும் என்பதும்தான் மக்களை நிம்மதியடைய வைத்திருக்கிறது.

ஏழை, பணக்காரன், மேல் சாதி, கீழ் சாதி என்கிற ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும் அரசாங்கம் அறிவிக்கப்போகும் ரேஷனுக்கும், பண உதவிக்கும் முன் சமனாகியிருக்கிறது. அரசாங்கம் இலவச அறிவிப்பு கொடுத்தவுடனேயே எல்லோரும் வரிசையில் போய் முண்டியடித்து வாங்கத்தான் போகிறோம். 

அதனால், இனியாவது ரேஷன் கடைதான் முக்கியம் என்பதை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், பொருளாதார மேதைகளும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டையும் மூடிவிட்டால், நாடு வன்முறைக் காடாகிவிடும்.