காலை சாப்பாட்டுக்கு கொஞ்சம் சணல் மண், மதியம் சாப்பாட்டுக்கு கொஞ்சம் சவுடு மண், இரவுக்கு கொஞ்சம் வண்டல் மண் இருந்தால் போதும் என்கிறார் தூத்துக்குடி பாட்டி. அவ்வப்போது உடல்நிலை சரியில்லை என்றால் விநாயகர் சிலை செய்ய பயன்படும் களிமண்னை மாத்திரையாக போட்டுக் கொல்வாரா தெரியவில்லை.
மதியப் சாப்பாடு சவுடு மண்! இரவுக்கு வண்டல் மண்! உடம்பு சரியில்லைனா களிமண்! 40 வருடமாக வெறும் மண்தான் சாப்பாடு! மிரள வைக்கும் மூதாட்டி!
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அடுத்த சூசை நகரில் வாழ்ந்து வருகிறார் 80 வயது மூதாட்டி மரியசெல்வம். தனது 40 வயதில் நொறுக்குத் தீனி போல் சாப்பிட ஆரம்பித்த மண்ணை இன்று வரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் உலகமே பார்க்கத் தொடங்கி உள்ளது.
மண்ணை பக்குவமாக சலித்து சர்க்கரையை போல் வாயில் போட்டுக்கொள்கிறார் அந்த பாட்டி. ஆரம்ப காலத்தில் மண்ணை சாப்பிடும்போது வயிறு வலித்ததாகவும், தற்போது அந்த பிரச்சனை இல்லை எனவும் சாதாரணமாக சொல்கிறார் மரியசெல்வம் என பெயரிடப்பட்ட பேமஸ்ஆன பாட்டி. அந்த பாட்டி மண் சாப்பிடுவதை பலமுறை உறவினர்கள் கண்டித்தபோது சிறு குழந்தைபோல் கேட்காமல் சாப்பிடுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு பாட்டி 40 வயது முதல் 80 வயது வரை மண் சாப்பிட்டு உயிரோடு இருக்கிறார் என்றால் உடனடியாக நமது அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒருவேளை மண் சாப்பிடுவதால் எந்த தீமையும் கிடையாது என ஆராய்ச்சி முடிவில் தெரிவித்து விட்டால் ரேஷன் கடையில் கால் கடுக்க வெயிலில் நின்று அரிசி வாங்க வேண்டியதில்லை, பாமாயில் வாங்க பக்கத்து வீட்டு பாமாவுடன் சண்டை போடவேண்டியதில்லை.
எரிவாயு மானியம் தரவில்லை என மத்திய அரசை குறை கூறவேண்டியதில்லை. சர்க்கரை விலை ஏற்றிவிட்டார்கள் என போராட வேண்டியதில்லை. அரிசி, கோதுமை, ரவா சாப்பிட்டு அல்ப ஆயிசில் போவதை விட மண்ணை மட்டும் சாப்பிட்டு 80 வயதுக்கு மேல் வாழ்ந்துவிட்டு மண்ணுக்குள் செல்லலாம்.
பொதுவாக வித்தைக் காட்டி அன்றாட பொழைப்புக்கு காசு தேடுபவர்கள் டியுப்லைட், குண்டு பல்பு ஆகியவற்றின் கண்ணாடிகளை உடைத்து சாப்பிடுவதை நாம் கண்கூடாக பார்த்திக்கிறோம். குழந்தைகள் கூட பசிக்கும்போது சாலையில் உள்ள மண் அள்ளை எடுத்து சாப்பிடுவதை பார்த்து இருக்கிறோம்.
பாட்டியின் உணவின் ரகசியம் தெரிந்தால் ரேஷன் கடையிலும் இனி மாதம் 20 கிலோ மண் மட்டும்தான் இலவசமாக தர முடியும் என்ற அறிவிப்பு வந்தாலும் வரலாம்.