தொடங்கிவிட்டது அம்மா உணவகத்தில் கட்டண உணவு!

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கையில் பணமில்லாத பலருக்கும் சோறு போடும் அன்னலட்சுமியாக விளங்கியது அம்மா உணவகம்தான். யார் வேண்டுமானாலும் இலவசமாக உணவு சாப்பிடலாம் என்று சொல்லப்பட்டது.


மேலும் சில அமைச்சர்கள் ஒட்டுமொத்த செலவுகளையும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், 5வது லாக்டவுன் நேரத்தில் சென்னையில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவை நிறுத்தியது மாநகராட்சி. அதன்படி ஜூன் 1ம் தேதி முதல் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் பணம் கொடுத்தால் மட்டுமே உணவு வழங்கப்படும். 

சென்னையில் மட்டும் 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.. ஊரடங்கு காலத்தில் சென்னையில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் விலையில்லா உணவை உண்டு பயன் பெற்றதாக தகவல்.

இப்போது, தி.மு.க.வினர் ஒவ்வொரு அம்மா உணவகத்துக்கும் ஸ்பான்சர் செய்தால், மீண்டும் இந்த மாதமும் மக்கள் இலவசமாக சாப்பிட முடியும். தி.மு.க.வினர் செய்வார்களா..?