ஓரினச்சேர்க்கை! ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டும் சகோதரி! டூட்டி சந்த் திடுக் புகார்!

ஓரினச் சேர்க்கையாளராக தன்னை தனது சகோதரி பணம் கேட்டு மிரட்டியதால் தான் அதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள நேரிட்டதாக தடகள வீராங்கனை டுட்டி தெரிவித்துள்ளார்.


யாரும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் இந்திய தடகள வீராங்கனை டுட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தான் தனது உறவு பெண் ஒருவரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி அதிர வைத்தார் டூட்டி சந்த்.  இதன்மூலம் ஓரினச் சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை என்று அவர் புகழப்பட்டார்.

அதேசமயம் டூட்டி ஓரினச்சேர்க்கையாளர் என்பதை ஏற்க முடியாது என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று டூட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் தான் தனது உறவு பெண்ணுடன் நெருங்கி பழகி வருவது தனது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்கு தெரியும் என்று டூட்டி தெரிவித்தார். இதனை பயன்படுத்தி எனது சகோதரி சரஸ்வதி ரூபாய் 25 லட்சம் கேட்டு தன்னை மிரட்டியதாக கூறி அவர் அதிர வைத்தார்.

25 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளியில் அனைவரிடத்திலும் தெரிவித்து விடுவேன் என்று சகோதரி சரஸ்வதி மிரட்டியதாகவும் கூறினார் டூட்டி. இதனால்தான் தன் ஓரினச் சேர்க்கையாளர்கள் படை வெளிப்படையாக அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.