லிஃப்டுக்குள் சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்! சிறுமியின் சமயோசித சாகசம்! மலைக்கச் செய்யும் சிசிடிவி பதிவு!

தற்காலத்தில் சி.சி.டி.வி.க்கள் சமூக வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு அங்கமாகி உள்ளன.


 குற்றங்களை கண்டு பிடிப்பது, தடுப்பது உள்ளிட்டவற்றில் சிசிடிவி காட்சிகள் முக்கிய பங்கு வகித்தாலும் சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகள், பயங்கரங்கள்  இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து உலகுக்கு காட்டுவதிலும் சிசிடிவி கள் முக்கிய பங்கு வகிக்கின்றன

அந்தவகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லிஃப்டுக்குள் நேர்ந்த பயங்கரம் தொடர்பான ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. லிஃப்டுக்குள் அந்த சிறுமி இருந்த நிலையில் மேலும் இரு சிறுவர்கள் நுழைகின்றனர். ஒரு சிறுவனின் கையில் ஒரு கயிறு. லிஃப்ட் கதவு மூடி விட்டு புறப்படுகிறது.

அப்போது சிறுவனின் கழுத்தில் இருந்த கயிற்றில் ஒரு அசைவு. லிஃப்ட் கதவில் கயிற்றின் மறுமுனையை சிக்கி கொண்டதன் விளைவுதான் அது. லிஃப்ட் நகர நகர அந்த கயிறு நகர்ந்து சிறுவனின் கழுத்தை இருக்கி அவனை மேலே தூக்குகிறது.

கண நேரம்தான் சிறுமி சற்றும் தாமதிக்காமல் சிறுவனை ஒரு கையால் தாங்கி பிடித்துக் கொண்டு மறுகையால் லிஃப்டின் ஒரு பட்டனை இயக்கி கதவின் இருக்கத்தை விலக்க முயற்சி செய்ய அந்த கயிறு தளர்ந்து கீழே வருகிறது. இதை அடுத்து சிறுவனின் கழுத்தில் இருந்து கயிற்றை விலக்கி அவனை அந்த சிறுமி காப்பாற்றுகிறாள்.

சில வினாடி நேர காட்சிதான் என்றாலும் சிறுமியின் தீரத்தையும் சமயோசித சாகசத்தையும் விளக்கும் இந்த சிசிடிவி காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது