தனித்து நின்றே தி.மு.க. ஜெயித்துவிடலாம்... ஸ்டாலினுக்கு ஆசை காட்டும் துரைமுருகன்.

கருணாநிதியின் சேவகனாக இருந்து, எல்லா நேரங்களிலும் கருணாநிதியை புகழ்ந்துபேசிவந்த துரைமுருகன், இப்போது பொதுச்செயலாளர் பதவியை மிகவும் கஷ்டப்பட்டு, பல்வேறு நாடகம் போட்டுத்தான் வாங்கியிருக்கிறார். அது மட்டுமின்றி, ஸ்டாலினை புகழ்ந்துபேச வேண்டிய கட்டாயத்துக்கும் இருக்கிறார்.


இந்த நிலையில் தி.மு.க.வுக்கு துரைமுருகன் ஒரு புது ரூட் காட்டுவதாகத் தகவல். அதாவது, ‘நம்மை மதிக்காத எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். தனித்தே நிற்போம்’ என்று துரைமுருகன் ஸ்டாலினுக்கு சூடு ஏற்றிக்கொண்டு இருக்கிறாராம்.

திமுக அணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், ஐஜேகே, முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள், அதிக இடத்துக்குப் போராடி வருகின்றன. மேலும் குறிப்பிட்ட தொகுதிதான் வேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்களின் தொடர் வலியுறுத்தல், திமுக நிர்வாகிகளை எரிச்சலடையச் செய்துள்ளது.

அண்மையில் அறிவாலயத்தில் நடைபெற்ற வழக்கமான ஆலோசனையின்போது துரைமுருகன் ரொம்பவே சீறியிருக்கிறார்.’’ தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட்டுக்குக் கூட வழியில்லாத கட்சிகளெல்லாம் நம்மை மிரட்டிப் பார்க்கின்றன. இதை அனுமதிக்கக் கூடாது. நம் வழி, தனி வழியென்று போய்க் கொண்டே இருக்க வேண்டும்’’ என கொந்தளித்தாராம்.

துரைமுருகன் இப்படி பேசுவதற்கு காரணம் இருக்கிறது என்றே சொல்கிறார்கள். அதாவது, பா..ம.க.வை எப்படியும் உள்ளே கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், இப்போதைய கட்சிகளை வெளியேற்றினால் மட்டுமே அதற்கு சாத்தியம் என்பதால், தனித்து நிற்கலாம் என்று சொல்லி, கூட்டணிகளை வெறுப்பேற்றி வருகிறார் என்கிறார்கள். துரைமுருகன் சொன்னதைக் கேட்டால் நிச்சயம் தி.மு.க.வுக்குத் தோல்விதான் ஏற்படும் என்கிறார்கள்.

ஆனால், ஸ்டாலின் யோசித்துவருவதுதான் தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது. ஏனென்றால், எப்போதுமே கடைசி நேரம் பிரச்னையை உருவாக்கிக்கொள்வதுதானே தி.மு.க.வின் ஸ்டைல்.