துரைமுருகன் கவர்னராகிறார்! சபரீசன் ராஜ்யசபா எம்பி. ஆகிறார்! தி.மு.க. பலே பிளான்!

நான்கு தொகுதி இடைத் தேர்தலில் ஸ்டாலின் கடுமையாக பிரசாரம் செய்துகொண்டிருக்க, சென்னை அறிவாலயத்தில் தினமும் சில முக்கிய தி.மு.க. புள்ளிகளின் அரட்டைக் கச்சேரி நடக்கிறது.


ஏற்கெனவே யாரெல்லாம் ஜூன் 3க்குப் பிறகு அமைச்சர்கள் என்பதை முடிவு செய்துவிட்டதால், இப்போது அடுத்த கட்டமாக யாரெல்லாம் கவர்னர்கள் என்று லிஸ்ட் போட்டு வருகிறார்கள்.

துரைமுருகனை இனிமேலும் பக்கத்தில் வைத்திருக்கக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். அதனால், துரைமுருகனை தமிழ் மருந்துக்கும் தெரியாத வட கிழக்கு மாநிலத்துக்கு கவர்னராக அனுப்பிவைக்கப் போகிறாராம் ஸ்டாலின். பேராசிரியர் அன்பழகனுக்கும் அப்படி ஓர் ஆசை இருந்தது. ஆனால், இப்போது பதவி ஏற்பு விழாவில் நிற்கக்கூட செய்வது கடினம் என்பதால், ஆசையை துறந்து விட்டாராம்.

அதேபோல் அடுத்த மாதம் மூன்று தி.மு.க.வினருக்கு ராஜ்யசபா சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கனிமொழி தோற்றுவிட்டாலும், அவருக்கு ராஜ்யசபா கீட் கிடையாதாம். ஒரு சீட் ஏற்கெனவே வைகோவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அதனால் மீதமுள்ள ஒரு சீட்டை மருமகன் சபரீசனுக்குக் கொடுக்கிறாராம் ஸ்டாலின்.

அதைத் தவிர மீதமிருக்கும் இன்னும் ஒரு சீட்டை யாருக்குக் கொடுப்பார் என்பதுதான் இப்போது தி.மு.க.வில் பெரிய சஸ்பென்ஸ். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு சீட் ராகுல் கேட்டிருப்பதாகவும் தகவல் ஓடுகிறது. ஆக, தி.மு.க.வினருக்கு நல்லாத்தான் பொழுது போகுது.