ஸ்டாலினை துரைமுருகன் கிண்டல் செஞ்ச ஆடியோ! விசாரணைக்கு அழைத்திருக்கும் உதயநிதி!

தி.மு.க.வில் எத்தனையோ பஞ்சாயத்துக்களைப் பார்த்தவர் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன். ஆனால், இப்போது அவருக்கு பஞ்சாயத்து வைக்கிறது தி.மு.க. இளைய படை. ஆம், அவரை உதயநிதி விசாரணைக்கு வரச்சொல்லி இருக்கிறாராம்.


ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்று சொன்னதுதான் தி.மு.க. வட்டாரத்தில் கடும் அதிருப்தியை கிளப்பியிருப்பதாக சொல்லப்பட்டாலும், உண்மை அது இல்லையாம். தி.மு.க.வுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் தேர்தல் நேரத்தில் பண ரெய்டில் மாட்டியதற்குத்தான் விசாரணையாம். இத்தனைக்கும் தி.மு.க. மேலிடத்தில் இருந்து எச்சரிக்கை விடப்பட்டதாம்.

ஏதாவது ஒரு வகையில் கதிர் ஆனந்தை சிக்கவைக்க முயற்சி நடக்கிறது என்று ஆளாளுக்கு எச்சரிக்கை கொடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லையாம். அது தவிர, சமீபத்தில் பிரசாரத்துக்குப் போனவர், அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் உதயநிதி, சபரீசன் குறித்து கேவலமாகப் பேசியதுடன் நில்லாமல், அவங்க சொல்றதை எல்லாம் கேட்க வேண்டிய நிலைமை என்று வருந்தினாராம்.

அந்த ஆடியோ இப்போது தலைமை கையில் இருக்கிறதாம். அதனால் துரைமுருகனுக்கு சிக்கல் என்கிறார்கள். துரைமுருகன் கையில் இருக்கும் பொருளாளர் பதவி விரைவில் எ.வ.வேலுவுக்குப் போகிறதாம். இதுக்கு என்ன சொல்லி சமாளிப்பாரா துரை முருகன்?