ஆண்டிப்பட்டியில் அம்பலத்துக்கு வந்த ஊழல்! போலி கையெழுத்து மோசடி!

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ஜி உசிலம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் 2018 to 2019 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தில் நடைபெற்ற பணிகள் பற்றியும் அதற்கு உண்டான செலவினங்கள் பற்றியும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது மேலும் கூட்டத்தில் நிதி முறைகேடு பற்றி விவாதிக்கப்பட்டது அதில் பணித்தள பொறுப்பாளர் நிதி முறைகேடாக சுமார் ஒன்றரை லட்சம் (150000)வரை நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

கிராமசபை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது ஊராட்சியில் குடி இல்லாதவர்கள் வேலை செய்ததாகவும் அரசுப் பணியில் உள்ளவர்கள் வேலை செய்ததாகவும் போலியான கையொப்பமிட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் பணித்தள பொறுப்பாளர்கள் இயந்திரங்களை வைத்து ஜேசிபி வைத்தும்(JCP) பணிகளை செய்ததாகவும் பணித்தள பொறுப்பாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர் இக்கூட்டத்திற்கு சமூக தணிக்கை அலுவலர் நாகராஜ் அவர்கள் தணிக்கை வாசித்தார் ஊராட்சி செயலாளர் சரண்யா அவர்கள் மற்றும் மண்டல அலுவலர் சித்திக் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கிராமசபை முடிக்கப்பட்டது.

ஆகையால் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் Gஉசிலம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளில் முறைகேடு மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்தது.