சுற்றுலா பேருந்து தலை குப்புற கவிழ்ந்து கோரம்! 17 பேர் பலியான பரிதாபம்!

துபாயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி சென்ற பேருந்து திடீரென சாலையோரம் உள்ள தடுப்பில் மோதியதால் அங்கு பெரும் விபத்து ஏற்பட்டது.


இந்நிலையில்  17 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் சிறு சிறு காயங்களுடன்  உயிர்பிழைத்த சிலர்  சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு  அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலவியது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.துபாய் அருகே வந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதிய பேருந்து விபத்தில் சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை  அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.விபத்தில் 8 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் பலியானவர்கள் ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹகர் தாகூர் ஆகிய 8 இந்தியர்கள் விபத்தில் உயிரிழந்தனர்  என  இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.