மூடிய லெதர் பேக்கிற்குள் பச்சிளம் குழந்தை! திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

துபாய் விமான நிலையத்தில் சோதனையின்போது டிராவல் பேக்கில் 5 மாத குழந்தையை கடத்தி வந்த நபர்கள் கையும்களவுமாக பிடிபட்டனர்.


துபாய் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்திலிருந்து வரும் பயணிகளின் உடைமைகளை பரிசோதித்து வந்துள்ளனர். அப்போது ஒருவரின் டிராவல் பேக்கை பரிசோதனை செய்யும்போது அதில் 5மாத குழந்தை ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து அந்த குழந்தையை டிராவல் பேக்கில் வைத்து குழந்தை மீது சில பல பொருள்களை வைத்து குழந்தையை மறைத்து கடத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரி குழந்தையை வெளியே எடுத்தபோது குழந்தை சிறிதுகூட அழுகாமல் புன்னகையுடன் வெளியே வந்தது. 

இந்நிலையில் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த குழந்தை பாகிஸ்தான் நாட்டிலிருந்து விமானம் வழியாக கடத்தி வந்துள்ளதாக கடத்தல்காரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்தக் குழந்தை அவர்களின் பெற்றோர்களிடம் கொண்டு சேர இறைவனை வேண்டுவதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.