பிரிட்டனில் மதுபோதையில் குழந்தை மீது தாய் புரண்டு படுத்ததில் 4 வயது குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மது போதையில் படுக்கையில் 4 வயது குழந்தையுடன் படுத்த தாய்! நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்!

குழந்தையின் தாய் அதிகளவு போதையில் இருந்ததால் தான் என்ன செய்வதென்றே தெரியாமல் படுத்து உறங்கியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் லிவர்பூலைச்சேர்ந்த ஆண்ட்ரூஸ் மற்றும் மில்ட்டா தம்பதியினர் ஒரு இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு அதிக அளவில் மது அருந்தி வீட்டுக்கு வந்துள்ளனர். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஆண்ட்ரூஸ் அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் மில்ட்டா தனது குழந்தை மிசாவுடன் சோபாவில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில் மில்ட்டா மிகுந்த மது போதையில் இருந்ததால் அருகில் இருந்த தனது குழந்தை மீது உருண்டு படுத்துள்ளார். இந்நிலையில் குழந்தை கதறி அழுதுள்ளது அதனை கண்டுகொள்ளாத மில்ட்டா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளது. உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் தாய் தந்தை இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் குழந்தையின் உடம்பில் எந்த ஒரு காயமும் இல்லாத காரணத்தினால் இந்த விபத்து தற்செயலாக நடைபெற்றது தான் என போலீசார் வழக்கை முடித்தனர். தாயே மதுபோதையில் தன் குழந்தை என்று கூட தெரியாமல் குழந்தை மீது புரண்டு படுத்து குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.