தப்பிக்க விடுவேனா..! 6 அடி பாம்பை பிடித்து குடிமகன் அரங்கேற்றிய விபரீத சம்பவம்! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

ராஜஸ்தானில் போதையில் இருந்த புள்ளிங்கோ கையில் சிக்கிய 6 அடி பாம்புடன் சண்டை போட்டை போட்டு தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.


ராஜஸ்தான் மாநிலத்தில் தவ்சா பகுதியில் காலையிலெயே செம்ம போதையில் குடிமகன் ஒருவர் தட்டு தடுமாறி வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிராக யதார்த்தமாக வந்த 6 அடி கருநாக பாம்பை பார்த்த நம்ம போதை புள்ளீங்கோ அந்த பாம்பு கூட சண்டை செய்ய துவங்கியுள்ளார்.

தன் முன்னதாக படமெடுத்து கொலை வெறியுடன் இருந்த நாக பாம்பை வாய் சண்டையால் மிஞ்ச நினைத்து போராடியுள்ளார். பல மணி நேரங்களாக நீடித்த அவர்களது சண்டையில் ஹே எங்க போற ? நான் உன்னை சும்மா விட மாட்டேன்னு மனுஷன் வம்பிழுக்க,

படமெடுத்த பாம்போ பாரபட்சம் பார்க்காமல் கண்ட இடமெல்லாம் கொத்தியது, இவர்களது சண்டையை நிறுத்த போராடிய மக்களால் முடியவில்லை. நிலைமை கை மீறி போனதை உணர்ந்தனர் இதற்கிடையில் கொத்தி கொத்தி கடைசியாக பாம்பே பரிதாபமாக இறந்து போனது.

இதனை அடுத்து போதையில் விஷம் ஏறி மட்டையான புள்ளீங்கோவை அங்கிருந்த மக்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்