முதலில் என்னை ஆற்றில் தூக்கி வீசினார்! என் தங்கை கதி தெரியவில்லை! தந்தயின் கொடூரம் குறித்து மகள் வெளியிட்ட திடுக் தகவல்!

குடிபோதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் மகள்களை தந்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அரசாலற்றில் குடிபோதையில் தந்தையால் தூக்கி வீசப்பட்ட லாவண்யா என்ற சிறுமியை பொதுமக்கள் காப்பாற்றினர். இதுகுறித்து லாவண்யா போலீசாரிடம் தெரிவித்தபோது,  

நேற்று மாலை எங்களது தந்தை என்னையும் என் தங்கை ஸ்ரீமதியையும் பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். குடிபோதையில் நிதானத்தை இழந்திருந்த அவர் எங்கள் இருவரையும் அரசலாற்று பாலத்தில் உட்காருமாறு கூறினார்.

அப்போது “உங்கள் இருவரையும் இந்த ஆற்றில் தூக்கிப்போட்டால் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார். “ஆற்றில் தூக்கி போட்டால் 2 பேரும் செத்துடுவோம்” என்று சொன்னேன்.

பின்னர் என் தந்தை என்னை முதலில் ஆற்றில் தூக்கி போட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்து காப்பாற்றுங்கள் என கூப்பாடு போட்டேன். அங்கிருந்த பொதுமக்கள் சிலர் என்னை காப்பாற்றினர். என்னை ஆற்றில் போட்டவுடன் பயந்து போன என் தங்களை ஸ்ரீமதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவளது கதி என்ன ஆனது என தெரியவில்லை. ஆனால் என் தந்தை தான் அவளையும் ஆற்றில் தூக்கிப் போட்டதாக கூறி வருகிறார். அவளை ஆற்றில் போட்டதை நான் பார்க்கவில்லை. அவளுக்கு என்ன ஆயிற்றோ என பயமாக உள்ளது. எப்படியாவது போலீசார் தந்தையை தீவிரமாக விசாரித்து தங்கை ஸ்ரீமதியை கண்டுபிடிக்க வேண்டும் என பயத்துடன் பேட்டியளித்தார் லாவண்யா.