18 வயது அண்ணனால் 16 வயது தங்கைக்கு ஏற்பட்ட விபரீதம்! கேட்போரை பதற வைக்கும் சம்பவம்!

மங்களூருவில் மாயமான 16 வயது சிறுமியின் உடல் பாகங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.


கர்நாடக மாநிலம், முடிப்பு பகுதியை சேர்ந்த ஃபியோனா ஸ்வீடல் குடின்ஹோ என்ற  16 வயது சிறுமியை காணவில்லை எனக் கூறி, அவரது சகோதரர் சாம்சன் (18 வயது) போலீசில் புகார் செய்தார். 2 வாரங்களாக, சிறுமியை காணாத நிலையில், அவர் கடைசியாக மங்களூரு நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றதாக, விவரம் கிடைத்தது. ஆனால், அதன்பின் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை.  

இதையடுத்து, வழக்குப் பதிந்த போலீசார், தீவிர தேடல் மேற்கொண்டனர். இதற்காக, சுமார் 40 பேரை தேடும் பணியில் ஈடுபடுத்திய போலீசார், ஒருகட்டத்தில் ஃபியோனாவின் சகோதரரும், போலீசில் புகார் கொடுத்தவருமான சாம்சன் மீதே சந்தேகம் விழுந்தது. ஆம், கஞ்சா அடிமையான அவர், எந்நேரமும் ஒருவித பதட்ட மனநிலையில் காணப்பட்டதால், அவரை விசாரித்த போலீசார், உண்மையை கண்டுபிடித்தனர்.  

ஆம், ஒருநாள் ஃபியோனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாம்சன், திடீரென சுத்தியலால் அவரை அடித்துக் கொன்றுவிட்டார். பிறகு, தங்கையின் சடலத்தை எடுத்துச் சென்று, தனது வீட்டின் பின்புறம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் புதைத்துவிட்டு, மங்களூரு சென்றுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதன்பேரில், சடலம் புதைக்கப்பட்ட இடத்தை சாம்சன் அடையாளம் காட்ட, அங்கே தோண்டிய போலீசார், ஃபியோனாவின் சடலத்தை மீட்டெடுத்தனர். 2 வாரங்களுக்கும் மேல் ஆனதால், உடல் அரிக்கப்பட்ட எலும்புக் கூடாக இருந்தது. அவரது மொபைல் ஃபோன், பற்கள், தலைமுடி ஆகியவற்றின் மாதிரியை தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.