தாய் - தந்தைக்கு கத்தி குத்து! பாட்டி கொடூர கொலை! பேஸ்புக்கில் நேரலை! மிரள வைத்த இளைஞன்!

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு இளைஞன் தனது குடும்பத்தவர்கள் அனைவரையும் கத்தியால் குத்தியதில் அவனது பாட்டி உயிரிழந்தார். பின்னர் அவன் ஃபேஸ் புக்கிலும் லைவ் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஹூக்ளி மாவட்டம் கியோட்டா ஷிப்தாலா என்ற இடத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் இந்த்ரனில் ராய். கடந்த ஞாயிற்றுக் கிழமை இவன் தனது பெற்றோர் மற்றும் 80 வயது பாட்டி ஆரத்தி ராய் ஆகியோரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆரத்தில் ராய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் இந்த்ரனிலை கைது செய்தனர். 

லேசான காயங்களுடன் தப்பிய இந்த்ரனிலின் பெற்றோர் தற்போது நலமாக உள்ளனர். இதனிடையே தனது பாட்டியை கொலை செய்த பின் ஃபேஸ்புக்கில் லைவ் செய்ததாக தெரிய வந்ததாகவும், ஆனால் அதனை தாங்கள் உறுதிப்படுத்தவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்திரனில் போதை மருந்துக்கு அடிமையனவன் என்றும், அவன் அவ்வப்போது வன்முறைக் குணத்தோடு நடந்துகொள்ளக்கூடியவன் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த போது அவன் போதை மருந்தின் ஆதிக்கத்திலோ மனநலம் பாதிக்கபப்ட்டோ இருந்திருக்கக் கூடும் என மனோதத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். 

இதேபோன்று மும்பை அந்தேரியில் தனது அத்தையையும், பிட்ஸா டெலிவரி ஊழியரையும் கத்தியால் குத்திய இளைஞனை டெல்லியில் போலீசார் கைது செய்தனர். 26 வயது இளைஞனான சுஷில் யாதவ் தனது அத்தை அனிதாவை அடிவயிற்றில் கத்தியால் குத்திய நிலையில் அதனைத் தடுக்க வந்த பிட்ஸா டெலிவரி ஊழியர்  ரவி யாதவையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினான்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சுஷிலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் பெண் வீட்டார் மறுத்துவிட்டதும், அதற்கு அவன் தனது  குடும்பத்தினரையே குற்றம்சாட்டி வந்ததும் தெரியவந்தது. 

இந்நிலையில் அவன் டெல்லியில் இருந்து தன் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசி பணம் கேட்டு நச்சரித்ததும், பணம் போடாவிட்டல் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது. அதன் பேரில் டெல்லி சென்று போலீசார் சுஷிலை கைது செய்தனர்.