கியருக்கு பதில் மூங்கில் கம்பு! பேருந்து ஓட்டுரின் விபரீத செயலால் நேர்ந்த கொடூரம்!

கியர் கம்பி இல்லாத காரணத்தால் மூங்கில் கம்பை ஊன்றி பேருந்தை இயக்கி ஓட்டுனர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ளது சாண்டா க்ரூஸ் நகரம். இங்கு போடார் கல்வி நிலையம் உள்ளது. இந்தக் கல்வி நிலையத்தில் மாணவர்களை ஏற்றி வருவதற்காக நிறைய பேருந்துகள் உள்ளன.

 

இதில் ஒரு பேருந்தை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அந்த பேருந்தானது செவ்வாய்க்கிழமை அன்று மது பார்க் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்று கொண்டிருந்த பிஎம்டபுள்யூ கார் மீது இந்த பேருந்து மோதியது ‌.

 

சொகுசு காரை விட்டு இறங்கிய அதன் உரிமையாளர் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேருந்தில் கியர் லிவர் கம்பிக்கு பதில் மூங்கில் கம்பை ஓட்டுனர் ராஜ்குமார் பயன்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இதுகுறித்து உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுனர் ராஜ்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கியர் கம்பியை பழுது பார்ப்பதற்கு நேரம் இல்லாத காரணத்தால் மூங்கில் கம்பை ஊன்றி வைத்து பேருந்தை இயக்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

கியர் கம்பி உடைந்து போய் பல நாட்கள் ஆகி விட்டதாகவும் அதிர்ச்சித்தகவலை ராஜ்குமார் கூறியுள்ளார். ஏராளமான பள்ளி மாணவர்களின் உயிரை பணயம் வைத்த ஓட்டுனருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்த ப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

 

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பி.எம். டபிள்யூ கார் மீது மோதிய காரணத்தினால் இந்த விபத்து வெளியே தெரிந்துள்ளது. தன்னுடைய சோம்பேறித் தனத்திற்கு மாணவர்களின் உயிரை காவு வாங்கும் கொடூர நிகழ்வு அந்த டிரைவரால் ஏற்பட இருந்தது.