பேருந்தில் திடீர் மாரடைப்பு! தன் உயிரை கொடுத்து 50 பேரை காப்பாற்றிய டிரைவர்!

மாரடைப்பு வந்த நிலையில் சமயோசிதமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய டிரைவர்!


மாரடைப்பு வந்தபோதும், சமயோசிதமான முறையில் செயல்பட்டு, 50 பேரின் உயிரை காப்பாற்றிய டிரைவரின் செயல் காண்போரை கண்கலங்கச் செய்ததுசென்னை பூந்தமல்லியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


நேற்று முன் தினம் அதி காலையில்திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் விரைவு அரசுப் பேருந்தை ரமேஷ் என்ற டிரைவர் ஓட்டிக் கொண்டிருந்தார்

 

அவருக்கு 47 வயது. வழக்கம்போல, பேருந்தை ஓட்டிவந்த ரமேஷ்க்குபூந்தமல்லி அருகே நெற்குன்றம் வந்தபோது, எதிர்பாரா வகையில், திடீரென பாதி வழியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 

இருந்தபோதிலும், தனது உயிரை பற்றி கவலைப்படாத ரமேஷ்பேருந்தில் உள்ள பயணிகளை பத்திரமாகக் காப்பாற்ற தீர்மானித்தார். இதையடுத்து, மிக சமயோசிதமாகச் செயல்பட்டு, பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, அப்படியே கண்மூடினார்.

 

பூந்தமல்லி சாலையில் நெற்குன்றம் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கும். இந்த நிலையில் சிறிதும் விபரீதம் ஏற்படாத வகையில் டிரைவர் செயல்பட்டதால் பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

 

உடனடியாக, பதறியடித்த பொதுமக்கள், டிரைவர் ரமேஷை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, அறிவித்தனர்இந்த செய்தியால் பயணிகள் உள்பட பலரும் சோகமடைந்தனர்

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரை கொடுத்து, 50 பேரை சிறு காயம்கூட இல்லாமல், பத்திரமாகக் காப்பாற்றிய டிரைவர் ரமேஷின் செயல், பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.