பெற்ற தாயை கொலை செய்து மூளையை எடுத்து சமைத்து தின்ற கொடூரன்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

ராய்கார்: மது அருந்த பணம் தராத தாயை கொன்று, அவரது மூளையை வெட்டியெடுத்து வறுத்து சாப்பிட முயன்ற மகன் கைது செய்யப்பட்டார்.


சத்தீஸ்கர் மாநிலம், ராய்கார் அருகே உள்ள போடால்டா கிராமத்தில் பூலோ பாய் என்பவர்  வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிதாராம் ஓராயான். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிதாராம், தனது தாயிடம் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவர் பணம் தர மறுக்கவே, தாய் என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரம் தாங்காமல், தாயின் மண்டையை அடித்து உடைத்து, மூளையை வெளியே எடுத்துள்ளார். அதனை எண்ணெய் சட்டியில் வைத்து வறுத்துள்ளார்.

பிறகு, சாப்பிட முயன்றபோது, அவரது சகோதரரின் மனைவி அங்கே வந்து கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக, சிதாரம் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு, குற்றவாளி சிதாராமை தீவிரமாக தேடினர். உள்ளூரில் மறைவிடத்தில் பதுங்கியிருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர். பெற்ற தாய் என்றும் பாராமல் அடித்துக் கொன்ற மகனுக்கு, உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.