முழு போதை! அசுர வேகம்! பைக்கில் சென்ற மூன்று பேர் ஒரே நொடியில் மாயமான பயங்கரம்! வைரல் வீடியோ உள்ளே!

குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு வீடியோ ஆதாரம் அரியானா மாநிலத்தில் வெளியாகி உள்ளது.


ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதால் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் விதிகளை மீறி ஒரு மோட்டார் பைக்கில் குடிபோதையில் 3 இளைஞர்கள் செல்கின்றனர்.  

திடீரென அந்த மோட்டார் பைக் விபத்தில் சிக்குகிறது. அதில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு மாயமாகி விடுகின்றனர். இந்த விபத்தை பார்க்கும்போது மாயாஜால வித்தை போன்று காட்சி தருகின்றனது. இந்த வீடியோ ஷாந்தோனில் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பைக்கில் மூன்று இளைஞர்கள் சாலையில் இடதுபுறம் செல்லாமல் வலதுபுறம் செல்கின்றனர். அவர்களுக்கு பின்னே வேகமாக வந்த கார்கள் ஒலி எழுப்பி அவர்களை ஒதுங்கச் செய்துவிட்டு ஓவர்டேக் செய்தன.

அதிக போதையில் இருந்ததால், இடப்பக்க பாதைக்கும், நடு பாதைக்கும் இங்கும் அங்குமாக மாறி சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் பைக் பாதையை பிரிக்கும் டிவைடர் மீது மோதியது. இந்த விபத்தில், 3 இளைஞர்களும் எதிர்பக்க சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வீடியோவை காரில் வந்த இளைஞர்கள் செல்போனில் பதிவு செய்திருந்தனர்.

மதுபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்க போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டாலும், அவர்களை ஏமாற்றிச் செல்லும் இளைஞர்கள் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் என்ன மாதிரியான அசம்பாவிதம் நடக்கும் என்பதற்கு இது உதாரணம்.