சிக்கன் பக்கோடா கேட்ட சிறுமியை சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூரன் - திருவள்ளூர் திகில்

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே "சிக்கன் பக்கோடா"கேட்டு கொடுக்காததால் அந்த நபரின் கையைக் கடித்த குழந்தையை போதையில் கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர் அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த அமீர் என்பவரின் குழந்தை இஷானி (4) மாலை வேளையில் வீடு திரும்பாத நிலையில் தனது குழந்தையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து மறுநாள் நிறுவனத்திற்கு அருகில் உள்ள ஒரு முட்புதரில் குழந்தையின் உடல் ஒன்று இருப்பது தெரியவந்தது இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் அங்கு வந்து அந்தக் குழந்தையின் உடலை கைப்பற்றினர். குழந்தையின் உடலில் அதிக அளவு காயங்கள் இருந்துள்ளது.

இதையடுத்து அந்த குழந்தை அமீரின் குழந்தை என உறுதி செய்யப்பட்ட பிறகே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர் அப்போது சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலக்கர் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் குழந்தையை கொன்றார் என்பது உறுதியானது.இதையடுத்து குழந்தையை கொள்வதற்கான காரணங்கள் குறித்து கேட்டபோது அதற்கு அவர்  தினமும் மாலை வேளையில் இஷானியை கடைக்கு அழைத்துச் செல்வது வழக்கம் போல் அன்றும் வெள்ளவேடு பகுதிக்கு குழந்தையை அழைத்துச் சென்றேன்.

அங்கு சென்று மது அருந்திவிட்டு சாப்பிடுவதற்காக சிக்கன் பக்கோடா வாங்கி விட்டு வந்தோம் அப்போது வரும் வழியில் ஒரு திட்டில் உட்கார்ந்து சிக்கன் பக்கோடா சாப்பிட்டேன் அப்போது குழந்தை தனக்கு சிக்கன் பக்கோடா வேண்டும் எனக் கேட்டது. நான் தர மறுத்த நிலையில் தனது கையை குழந்தை கடித்ததாக கூறியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த அவர் குழந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார்.

அப்போது சுவற்றில் மோதி குழந்தையின் தலையில் பலமான அடி ஏற்பட்டது இந்நிலையில் சம்பவ இடத்திலேயே  குழந்தை உயிரிழந்தது இதை எடுத்து பதறிப்போய் குழந்தையின் உடலை அருகில் உள்ள முட்புதரில் வீசி விட்டு சென்றதாக போலீசாரிடம் நிலக்கர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவர் மீது கொலை குற்ற பிரிவு வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.