குடி போதையில் பட்டாசு! கையில் வெடித்த விபரீதம்..! கை இரண்டாக பிளந்த பரிதாபம்!

லண்டன்: குடிபோதையில் வேலை பார்த்த கார்பென்டரின் கை இரண்டாகப் பிளந்துவிட்டது.


பிரிட்டனைச் சேர்ந்த அந்த கார்பென்டருக்கு 30 வயதாகிறது. குடிபோதையில் இருந்த அவர், வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, சாக்கெட்டில் கை வைத்திருக்கிறார். அப்போது திடீரென சாக்கெட் வெடித்துச் சிதற அதில் கார்பென்டரின் நடுவிரல் துண்டிக்கப்பட்டு, அதன் வழியாக, சுண்டு விரல், மோதிர விரல் ஒருபுறமும், ஆள் காட்டி விரல் கட்டை விரல் ஒரு புறமும் பிளந்துகொண்டது. இதன்படி, அவரது உள்ளங்கை இரண்டாகப் பிரிந்து, அதிக ரத்தப் போக்கு நிகழ்ந்துவிட்டது, கடும் அவதிக்கு ஆளான அந்த கார்பென்டர், தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.  

வெடிக் காயத்தால் உள்ளங்கையில் உள்ள எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கென பிரத்யேக கம்பிகளை வைத்து, விரல் எலும்புகளை இழுத்துக் கட்டிய மருத்துவர்கள், அந்த நபருக்கு செயற்கையான நடுவிரல் ஒன்றையும் பொருத்த முயன்றனர். ஆனால், பலன் இல்லை, இதையடுத்து, நடுவிரல் இருந்த பகுதிக்கு, மோதிர விரலை நகர்த்தி வைத்து, கையை தைத்துவிட்டனர். தற்போது, நான்கு விரலுடன் அந்த நபர் பிசியோதெரபி சிகிச்சைகளை செய்ய தொடங்கியுள்ளார்.  

வேலை செய்யும்போது யாரும் மது அருந்தாதீர்கள் என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.