முதலில் மச்சினிச்சி..! பிறகு சகோதரி..! அப்புறம் பெற்ற தாய்..! போதை தலைக்கேறிய இளைஞன் அரங்கேற்றிய பாலியல் சம்பவம்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் தாய், தங்கை, மைத்துனியை குடிபோதையில் பலாத்காரம் செய்துவந்த இளைஞரை குடும்பமே சேர்ந்து தீர்த்துக் கட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.


மத்திய பிரதேசம், டாட்டியா பகுதியை சேர்ந்த சுஷில் ஜாதவ் என்ற இளைஞருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்வது கண்ணுக்கு தெரிந்த பெண்களை கையை பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  

குடிபோதைக்கு அடிமையான சுஷில் ஜாதவ். எப்போதும் குடித்துவிட்டு தான் வீட்டிற்கு செல்வார். அப்படி செல்லும்போது வீட்டில் இருக்கும் பெண்களை விடுவதில்லை. அவர் கண்ணிற்கு யார் படுகிறாரோ அவரை பாலியல் பலாத்காரம் செய்வார். தாய், சகோதரி, சகோதரனின் மனைவி என பாரபட்சம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்து தன்னுடைய இச்சையை தீர்த்துக்கொள்வார். இதே போன்று தொடர்ந்து செய்து வந்ததால் அவரை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.

கடந்த 11-ம் தேதி குடிபோதையில் இருந்த ஜாதவ், சகோதரனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றபோது அனைவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை மலைப்பகுதியில் போட்டுவிட்டனர். இதையடுத்து மலைப்பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.