17 வயது மகன் முன்னிலையில் செக்ஸ் டார்ச்சர்! கணவனுக்கு மனைவியால் நேர்ந்த விபரீதம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கணவனை கொலை செய்து பிரிட்ஜ் அட்டை பெட்டிக்குள் அடைத்து வைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்


திருத்தணியை அடுத்த நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசனுக்கு மனைவி முனியம்மாளும், 17 வயது மகனும் உள்ளனர். முருகேசன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முருகேசனுக்கு கை, கால் செயலிழந்ததாகக் கூறி ஆட்டோவில் எடுத்துச் சென்ற முனியம்மாள், அவரது சகோதரன் ஏழுமலை, அண்ணி ஷீபா ஆகியோர்  சில மணி நேரம் கழித்து முருகேசன் உயிரிழந்து விட்டதாகக் கூறி ஊருக்குள் கொண்டு வந்தனர். 

முருகேசனை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது கழுத்தில் கயிறு இறுக்கிய தடயங்களைக் கண்டு மக்கள் அதிர்ந்தனர். இதுகுறித்த மக்களின் புகாரின் பேரில் போலீசார் முனியம்மாளிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

சம்பவத்தன்று, முருகேசன் வழக்கம் போல குடித்து விட்டு முனியம்மாளை அடித்து துன்புறுத்தியதும், இதனால் ஆத்திரமடைந்த முனியம்மாள் தனது சகோதரன் ஏழுமலை உதவியுடன் கணவனை கயிற்றால் கழுத்தை நெறித்துக்கொன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. 

இந்நிலையில் உடல்நலக்குறைவால் முருகேசன் உயிரிழந்தது போன்று நாடகமாடிய மூவரும் கழுத்தில் கயிற்றுத் தடத்தை மறைக்கத் தவறியதால் சிக்கிக் கொண்டதாகக் கூறுகின்றனர் போலீசார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கயிறையும் கைப்பற்றியபோலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணையில் 17 வயது மகன் முன்னிலையிலேயே கணவன் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், குடித்துவிட்டு ஆபாசமாக பேசியதாகவும் இதனால் மனம் உடைந்து கொலை செய்ததாக முனியம்மாள் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.