ஒரே நேரத்தில் பிரசவம்..! கணவனுக்கு இறுதிச் சடங்கு..! தவிக்கும் இளம் பெண்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் குழந்தை பிறக்க ஒரு சில நாட்களே உள்ள நிலையில் நண்பர் ஒருவரால் கணவனை இழந்த சோக சம்பவம் ஒரு கர்ப்பிணிக்கு அரங்கேறி உள்ளது.


லூசியானா பகுதியில் போர்ட்டியா ஸ்மித் என்பவரும் ஜோனதன் ஸ்மித் என்பவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். போர்ட்டியா ஸ்மித் என்பவர் நிறைமாத கர்ப்பிணி. 

ஜோனதன் பால்ய வயது நண்பர் கிறிஸ்டோபர் லெம்லி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தபோது துப்பாக்கி ஒன்றை எடுத்து குடிபோதையில் அனைவரையும் சுடப் போகிறேன் என்று விளையாட்டாக மிரட்டி உள்ளார். அந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டுள்ளது என ஒருவர் தெரிவித்தபோதும் அதை பொருட்படுத்தாது துப்பாக்கியை பிரயோகித்துள்ளார் கிறிஸ்டோபர்.

அப்போது துப்பாக்கியில் திடீரென வெடிச் சத்தம் கேட்டது. அதில் இருந்த தோட்டா ஒன்று எதிரில் இருந்த நண்பர் ஜோனதனை நோக்கிப் பாய்ந்தது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு பின்னர் உயிரிழந்தார்.

இது குறித்து போர்ட்டியா ஸ்மித் தெரிவிக்கையில் தங்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகி உள்ளதாகவும், குடிபோதையில் இருந்த நபர் ஜாக்கிரதையாக துப்பாக்கியை கையாண்டு இருந்தால் தான் கணவரை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது என்றும் தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் குழந்தை பெற்றெடுக்க உள்ளதாகவும், அந்த குழந்தையின் வரவை மிகவும் எதிர்பார்த்திருந்த கணவர் பிஞ்சு முகத்தை பார்க்காமலேயே சென்றுவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார். துப்பாக்கி, டேன்ஸ், குடிபோதை என மேல்நாட்டு கலாச்சாரத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஒரு பாடம்.