வெயிலுக்கு மோர் சாப்பிடுங்க!! பெண்களுக்கு வரும் வயிற்றுவலிக்கு நல்லது !

வீட்டுக்கு வ்ரும் விருந்தினர்களுக்கு மோர் கொடுத்து உபசரிப்பதுதான் தமிழர் பண்பாடு. காபி, டீ, குளிர் பானங்கள் எல்லாமே நாகரிக மோகத்தினால் ஏற்பட்டவையே.


தயிரில் தேவையான அளவு நீர் சேர்த்து கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், வெந்தயம் சேர்த்து செய்யப்படும் நீர் மோர், குடிக்கும் பானமாக மட்டுமின்றி மருந்தாகவும் செயலாற்றுகிறது.

·         உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் நீர் மோர் குடித்தால், உண்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகும், அஜீரண கோளாறுகள் நீங்கும்.

·         வெயிலால் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றை நீக்கும் மருந்து மோர்.

·         மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலியை கட்டுப்படுத்தும் சக்தி மோருக்கு உண்டு.

·         நம்மை அறியாமல் உடலில் சேரும் விஷத்தன்மை உடைய பொருட்களின் வீரியத்தை குறைக்கும் சக்தியும் மோருக்கு உண்டு.

சளித் தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மட்டும் மோர் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.