கணவனை விவாகரத்து செய்துவிட்டு சகோதரனுடன் தவறான பாதையில் பயணம்! இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!

ஐதராபாத்: குடிபோதையில் சகோதரியையே கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர் .


தெலுங்கானா மாநிலம் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42 வயது). கணவரை விவாகரத்து செய்துவிட்டு, சீதாலட்சுமி, தனது உறவுக்காரரான ரமணா ராவ் என்பவருடன் தனி வீட்டில் வசித்து வந்தார். ரமணா ராவ் அவருக்கு  சகோதரர் முறை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ரமணா ராவ் மது அருந்தும் வழக்கம் கொண்டிருந்துள்ளார். அதனை சீதாலட்சுமிக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். இருவரும் தினசரி ஒன்று சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர்.

சில நாட்கள் முன்பாக, மது போதையில் இருந்தபோது, சீதாலட்சுமியின் செயினை கேட்டு ரமணா ராவ் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், சீதாலட்சுமி மறுக்கவே, அவரை கழுத்து நெரித்து ரமணா ராவ் கொன்றுவிட்டாராம்.

பிறகு, அவர் தற்கொலை செய்துகொண்டது போல ஜோடித்துவிட்டு, அங்கிருந்து ரமணா ராவ் எஸ்கேப் ஆகிவிட்டார். இதுபற்றி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழவே, போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரமணா ராவ் இந்த கொலையை செய்திருப்பதை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர்.