மருத்துவமனைக்குள் நிர்வாணமாக நடமாடிய 23 வயது இளம் பெண்! அதிர வைக்கும் காரணம்!

குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஸ்டாஃபோர்டு பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள கேம்பிரிட்ஜ் தெருவில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று உள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி, இங்கே விட்டுச் செல்வது வழக்கம்.

இதன்படி, கடந்த வியாழக்கிழமை, காலை பராமரிப்பு மையத்தை திறக்க வந்த ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். பராமரிப்பு மையத்தின் உள்ளே, ஹெவன் கோனர் (23) என்ற பெண், நிர்வாணமாக நின்றுள்ளார். ஊழியர்களை பார்த்தும் கவலைப்படாத அவர், நிர்வாண போஸ் கொடுத்தபடி, ஒய்யாரமாக நடமாடியுள்ளார்.

உடனடியாக, அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர்கள், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வந்தபோது, கோனர் உடனடியாக, உடைகளை அணிந்து, கையில் ஸ்பூன் வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இருந்தாலும், அத்துமீறி குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் உள்ளே நுழைந்ததாகக் கூறி,  அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் திடீரென தனக்குநிர்வாணமாக நிற்க வேண்டும் என்று தோன்றியதால் அப்படி நின்றதாக கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார் இந்த பெண்மணி.