ரூ.5000 முதல் ரூ.5 லட்சம் வரை அள்ளிக் கொடுத்தாங்க..! 250 பேர் சேர்ந்து உருவாக்கிய திரௌபதி ! காரணம் சொல்லும் டைரக்டர்!

சமூக வளைதயத்தளங்களில் மூலம் 5ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்று உருவாக்கிய படம் திரௌபதி.


மேலும், இப்படம் தமிழ் திரைப்படங்களில் காட்டாத சாதியின் மறுபுறத்தை காட்டும் படமாகும். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்ங்களை ஒருங்கிணைத்த முக்கியமானவர்களின் ஒருவர் மோகன்.ஜி என்றாலும், இவர் பழைய வண்ணராப்பேட்டை என்ற படத்தின் இயக்குனர் ஆவர்.

மோகன் அவர்கள் பட்டாளி கட்சி ராமதாஸ் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மோகன் அவர்கள் சமூக வளைதங்களில் ஒன்றான முகநூலில் ஒரு பக்கத்தை உருவாக்கி சுமார் 5000 முதல் 5 லட்சம் வரை பணம் பெற்று திரௌபதி என்ற படத்தை தயாரித்துள்ளனர். 

மேலும், இயக்குனர் மோகன் அவர்கள், தீயில் பிறந்த அவர்களின் குலதெய்வம் திரௌபதியின் பெயரை இந்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழ திரைப்படத்தில் இதுவரை வந்துள்ள சாதி திரைப்படங்கள் அனைத்திம் நாணயம் என்றால் திரௌபதி அதற்கு மறுபக்கம் என்றும், மேலும், தனது சொந்த அனுபவத்தில் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளேன் என்று தெரிவித்தார் மோகன் அவர்கள். 

தற்போது இந்த இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும், எதிர்ப்பையும் இப்படம் பல விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. அதற்கு இயக்குனர் அவர்கள், எவ்வித எதிர்ப்பையும் சந்திக்க படக்குழு தயாராக உள்ளது என்றும் இயக்குனர் மோகன் அவர்கள் தெரிவித்தார்.