சுகாதாரத்துறை அமைச்சர் பதவிக்கு அன்புமணி ராமதாஸுடன் மோதும் டாக்டர் கிருஷ்ணசாமி! ஆடியோ ஆதாரம் ரெடி!

பா.ஜ.க. கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்து கட்சியினருக்கும் இன்று அமித் ஷா விருந்து கொடுப்பதையொட்டி, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த அன்புமணி, பிரேமலதா, சுதீஷ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பலரும் டெல்லிக்குப் போகிறார்கள்.


பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறுகிறது என்ற எக்ஸிட் போல் ரிசல்ட்டை வைத்துத்தான் இந்த மீட்டிங் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர் கனவில் டெல்லியில் முகாமிடும் கட்சியினர்தான் அதிகம். அதில் எப்படியும் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

இந்த விவகாரத்தை முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, தனக்குத்தான் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வேண்டும் என்று எடப்பாடியிடமும் தமிழக பா.ஜ.க. தலைமையிடமும், அமித் ஷாவிடமும் நேரில் கோரிக்கை வைக்கிறாராம். அன்புமணி கடந்த ஆட்சியில் பா.ஜ.க. குறித்து செய்த விமர்சனங்களை எல்லாம் ஆதாரபூர்வமாக கொண்டுபோயிருக்கிறாராம் கிருஷ்ணசாமி. ஆரம்ப காலம் முதல் தான் மட்டுமே பா.ஜ.க.வின் அடிமை என்றும் எனக்கு மட்டும்தான் சுகாதாரத்துறை பதவி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.

இந்த விவகாரம் தெரியவந்ததில் இருந்து அன்புமணி கொதிக்கிறாராம். கிருஷ்ணசாமி ஜெயிக்கவே மாட்டார் என்பதால், அந்த கோரிக்கைக்கே தேவை வராது என்று அன்புமணி மேலோட்டமாக சொல்லிவந்தாலும், உள்ளுக்குள் பயந்துபோய் கிடக்கிறாராம்.  இவர்களை சமாதானம் செய்யவேண்டிய எடப்பாடி, இப்போதைக்கு இதுகுறித்து எதுவும் பேசவேண்டாம் என்று விரட்டியே விட்டாராம்.