அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க! ராமதாஸ் பிரச்சாரத்தால் அதிர்ந்துபோன அதிமுக வேட்பாளர்!

தன் அதிமுக கூட்டணியில் இருப்பதையே மறந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவிற்கு ஓட்டு போடாதீங்க என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் அதிமுக சார்பில் செஞ்சி செவல் ஏழுமலை என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஆரணியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசினார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியை துவக்கத்தில் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருந்தார். அதேபோல் அதிமுக அரசையும் ராமதாஸ் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சிறப்பான முறையில் தமிழகத்தை நிர்வகிப்பதாக ராமதாஸ் அவர்களே வெட்கப்படும் அளவிற்கு பிரச்சாரத்தில் நெடி ஏற்றினார். இறுதியாக ராமதாஸ் பேசியது தான் மிகப்பெரிய ட்விஸ்ட் ஆகிவிட்டது.

அச்சாரம் முடியும் சமயத்தில் மக்கள் மறந்தும் கூட திமுக அதிமுகவிற்கு ஓட்டு போட்டு விடாதீர்கள் என்று ராமதாஸ் கூறிவிட்டார். இதனைக் கேட்டு அருகே இருந்த அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்த ராமதாஸிடம் அவர் செய்த தவறை சுட்டிக் காட்டினார்.

இதன் பிறகு திமுக காங்கிரஸ் கூட்டணி என்று சொல்வதற்கு பதிலாக திமுக அதிமுக என்று தவறுதலாக கூறிவிட்டதாக விளக்கம் கொடுத்தார் ராமதாஸ். வழக்கமாக திமுக அதிமுகவை விமர்சிக்கும் ராமதாஸ் அதே பழக்கத்தில் தான் அதிமுக கூட்டணியில் இருப்பதை மறந்து இப்படி செய்து விட்டதாக பாமக நிர்வாகிகள் விளக்கம் கொடுத்து விட்டுச் சென்றனர்.