யார் சொன்னாலும் இந்த பொருட்களையெல்லாம் முகத்தில் போடாதீர்கள்! அழகிற்கு பதிலாக ஆபத்தையே தரும்!

புதுசு புதுசாக விளம்பரத்தை பார்த்து கெமிக்கல்கள் நிறைந்த சோப்புகள், க்ரீம்கள் என்று தாராளமாக பயன்படுத்த தயாராகி விடுகிறோம். இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.


பருக்கள் மீது டூத்பேஸ்ட் தடவினால் சரியாகி விடும், சரும பாதிப்பிற்கு டூத்பேஸ்ட் சிறந்தது இது போன்ற விஷயங்களை நம்பி மக்கள் இதை செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் டூத்பேஸ்ட்டில் கலந்துள்ள நிறைய கெமிக்கல்கள் சரும எரிச்சலை ஏற்படுத்தக் கூடும். எனவே எக்காரணம் கொண்டும் டூத்பேஸ்ட்டை முகத்தில் அப்ளே செய்யாதீர்கள்.

ஷாம்பானது நமது தலையில் உள்ள அழுக்குகளை வெளியே கொண்டு வந்து நீக்கும் அடிப்படையில் செயல்படுகிறது. ஆனால் இது உங்கள் முக சருமத்திற்கு உகந்தது அல்ல. முகத்திற்கு ஷாமுபை பயன்படுத்தும் போது சருமத்தில் வறட்சி, தோல் உரிதல், திட்டுகள் போன்றவை தோன்றக் கூடும். எனவே தலைக்கு தேய்க்கும் ஷாம்பை கொண்டு முகத்தை சுத்தம் செய்யாதீர்கள்.

நிறைய பேர்கள் குளிக்கும் அவசரத்தில் பாடி லோசனைக் கூட முகத்திற்கு பயன்படுத்துவது உண்டு. கண்டிப்பாக இந்த மாதிரியெல்லாம் செய்யாதீர்கள். ஏனெனில் பாடி லோசன் கெட்டியான திரவ சோப். இதில் ஏராளமான கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை உங்கள் முகத்தில் அப்ளே செய்யும் போது சரும துளைகள் அடைத்து வேறுபட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.