கணவன் வீட்டில் அவசரத்துக்கு போக டாய்லெட் கூட இல்லை! திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!

திருமணமான 5 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து செய்துகொண்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


கோவில்பட்டியில் உள்ள மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு பங்கஜலட்சுமி என்ற பெண்ணுடன் ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏழ்மையான குடும்பம் என்பதால் ராமசாமி வீட்டில் முறையான கழிப்பறை வசதி இல்லை.

இதன் காரணமாக கணவன் மனைவி இடையே தொடர்ந்து சண்டை சச்சரவு நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் பங்கஜ லட்சுமி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து தொலைபேசி மூலமும் நேரில் சென்றும் பங்கஜ லட்சுமியை சமாதானப்படுத்தி அழைத்து வர ராமசாமி முயற்சி செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை. 

நேற்றைய தினம் கடைசி முறையாக தொலைபேசியில் அழைத்துள்ளார். இதற்கும் பங்கஜ லட்சுமி வர மறுத்திருக்கிறார். பின்பு கஜலட்சுமி வீட்டில் மனமுடைந்து காணப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென பங்கஜ லட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு வேலையை முடித்து விட்டு பங்கஜ லட்சுமியை சமாதானப்படுத்த அவரது வீட்டிற்குச் சென்ற ராமசாமி இதை கண்டதும் பேரதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் பங்கஜத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இது குறித்து வழக்கு பதிவு செய்து இது தற்கொலை தானா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஐந்தே மாதத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ராமசாமி வீட்டார் மனமுடைந்து காணப்படுகின்றனர்.