வசந்தகுமார் பேராசைக்கு நாங்குநேரி இடைத்தேர்தல்! குமரிஅனந்தனுக்கு சீட் கொடுக்காதீங்க.!

நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று ஆளாளுக்கு டென்ஷன் எகிறிப்போய்க் கிடக்க, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே இந்த விவகாரத்தில் கடும் ஆவேசத்தில் இருக்கிறார்களாம்.


ஏனென்றால், இப்படி ஒரு இடைத்தேர்தல் வருவதற்கு தேவையே இல்லை. எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமாருக்கு எம்.பி. சீட் கொடுத்திருக்க வேண்டியே தேவை, அவசியம் இல்லை. வசந்தகுமார் எனும் மல்டி மில்லியனரின் சொந்த அரிப்புக்காக நாங்குநேரி தொகுதியில் பல கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை கொட்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இந்த லட்சணத்தில் இங்கே இப்போது சீட் கேட்பது 4 முறை எம்.எல்.ஏ., 1 முறை எம்.பி. மற்றும் மாநில காங்கிரஸின் பதவிகளை அனுபவித்த பழுத்த கிழமாக இருக்கும் குமரி அனந்தன். இவர், அலட்சியமாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வசந்தகுமாரின் அண்ணன். இதே தொகுதிக்கு அதே வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தும், மச்சான் காமராஜும் விருப்ப மனு போடுகிறார். 

ஒரே குடும்பத்துக்கு தொகுதியை எழுதி வைத்திருக்கிறதா..? பணம் இருக்கிறது என்பதற்காக என்னவும் செய்யலாமா? இந்தத் தொகுதியில் காங்கிரஸ்க்கு வோட்டுப்போடாமல் இருப்பதுதான் மானமுள்ள மக்களின் செயல் என்கிறார்கள். ஆம், நாங்குநேரியை மதிக்காத வசந்தகுமார் இருக்கும் கட்சிக்கு நாங்குநேரி மக்கள் ஏன் ஓட்டுப் போடவேண்டும்?

சபாஷ் சரியான கேள்வி.