வளர்த்த ஓனருடன் சேர்ந்து பாடல் பாடிய கழுதை! இணையத்தில் 40 லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ!

கரோலினா: கழுதையுடன் சேர்ந்து டூயட் பாடிய நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


டிஸ்னி நிறுவனம் தயாரித்த தி லயன் கிங் என்ற படம் கிளாசிக் ரகத்தைச் சேர்ந்த ஒன்றாக, ஹாலிவுட் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த படத்தில் சர்கிள் ஆஃப் லைஃப் என்ற பெயரில் ஒரு டூயட் பாடல் வரும்.

இந்த பாடலை, அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த  நாதன் டிராவிஸ் கின்லே என்பவர் தனது வளர்ப்பு கழுதையான நாதனுடன் சேர்ந்து பாடி, அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் டிராவிஸ் பாட, அவருக்கு அந்த கழுதை பின்பாட்டு பாட, பார்ப்பதற்கே மிக சுவாரசியமாக உள்ளது. 

இந்த வீடியோவிற்கு சமூக ஊடகங்களில் நல்ல வ்ரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரையிலும் இந்த வீடியோவை 36 லட்சம் முறை இவ்வீடியோ பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

''எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் எனது கழுதை நாதன் ஒத்துழைப்பு கொடுத்ததே இந்த வெற்றிக்கு காரணம். என்னால் நம்பவே முடியவில்லை,'' என்று டிராவிஸ் குறிப்பிட்டுள்ளார்.