1.25 லட்சம் பார்வையாளர்களை கூட்டி நமஸ்தே ட்ரம்ப் சொன்ன மோடி..! டீ விற்று முன்னுக்குவந்த பிரதமர் என்று மோடிக்கு ட்ரம்ப் பாராட்டு

நமஸ்தே என்று கூறி தன்னுடைய உரையை தொடங்கியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய மக்களை அமெரிக்கா மிகவும் மதிக்கிறது. இந்திய மக்களுக்கு ஒரு தகவலை சொல்லத்தான் 8,000 கி.மீ. கடந்து வந்திருக்கிறேன் என்று கைதட்டலுக்கு இடையில் தெரிவித்தார் ட்ரம்ப்.


இந்தியா கொடுத்த விருந்தோம்பலை ஒருபோதும் மறக்கவே முடியாது. அமெரிக்கர்களின் மனதில் இந்தியா நிரந்தர இடம் பிடித்துவிட்டார்கள் என்று சொன்ன ட்ரம்ப், டீ விற்பனையாளராக இருந்து நாட்டின் பிரதமராக மாறியிருக்கிறார். மோடியை அத்தனை எளிதில் கணித்துவிட முடியாது என்று பாராட்டினார் ட்ரம்ப்.

மோடியை நாங்கள் கால்பந்து மைதானத்தில் வரவேற்றேன். எங்களை கிரிக்கெட் மைதானத்தில் வரவேற்றுள்ளீர்கள் என்று சொன்ன ட்ரம்ப், மோடியின் ஆட்சியில்தான் ஒவ்வொரு கிராமமும் மின்சாரம் பெற்றுள்ளது, கடைக்கோடி மக்களுக்கும் கேஸ் இணைப்பு கிடைத்துள்ளது என்று மோடியின் தூதரைப் போல் பேசினார்.

விவேகானந்தரை மேற்கோள் காட்டிப் பேசியதுடன் நில்லாமல், கிட்டத்தட்ட ஒரு பி.ஜே.பி. உறுப்பினர் போலவே பேசினார் என்பதுதான் அத்தனை பேருக்கும் மிகப்பெரும் வியப்பு. இந்தக் கூட்டத்தில் மெலனியா பேசவில்லையே என்பதுதான் மக்களுக்கு இருந்த மிகப்பெரிய சோகமாகிப் போனது.