CASAGRAND @ காசா கிராண்ட் வீட்டுமனைகள் வாங்காதீர்கள்! காஞ்சிபுரம் கலெக்ட்ரின் எச்சரிக்கை மணி!

சென்னை அருகே தழம்பூரில் வீட்டுமனைகள் விற்பனைக்கு என்று காசா கிராண்ட் வெளியிட்டுள்ள விளம்பரம் தொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியில் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர வைப்பதாக உள்ளது.


இது தொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.8.2019 நாளிட்ட சில தினசரி நாளிதழ்களில் தி/ள் காசா கிராண்ட் நிறுவனத்தினர் சென்னை உயர்நீதிமன்ற ரிட்மனு எண்.11156/2018 மற்றும் 13972/2018 ஆகிய வழக்குகள் தொடர்புடைய காஞ்சிபுரம் மாவட்டம்,

திருப்போரு:ர் வட்டம், தாழம்பூர் கிராமத்தில் வீட்டுமனைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டு நாளிதழ்களில் பெரிய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது, 

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், தாழம்பூர் கிராமம் புல எண்கள்,162/1, 163/1, 163/2, 164/1 மற்றும் 164/2 உள்ளிட்ட பல புலங்கள் அடங்கிய மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் தொடர்பான விவரங்களை விசாரணை செய்ய அரசு உத்தரவிட்டு அதனடிப்படையில் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எனவே, தாழம்பூர் கிராமத்தில் மேற்கண்ட புலங்கள் தொடர்பாக அரசு உத்தரவின்படி விசாரணை நடைபெற்று வருவதால் தி/ள் காசா கிராண்ட் நிறுவனம் அளிக்கும் விளம்பரங்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் விளம்பரத்தை நம்பி மனைகள் மற்றும் வீடுகள் வாங்கினால்

பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் மேலும் அரசின் சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு உட்படவேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.பா.பொன்னையா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

இந்திய அளவில பிரபலமான காசா கிராண்ட் நிறுவனத்தின் வீட்டுமனைகளை வாங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளிப்படையாக வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.