நீ போகாத.. நான் போறேன்..! குழந்தைக்காக தன் உயிரை பணயம் வைத்த பாசக்கார நாய்! நெகிழ வைக்கும் வீடியோ!

தண்ணீரில் இறங்கப் போன குழந்தையை வளர்ப்பு நாய் தடுத்த காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது.


இந்த வீடியோ எந்த நாட்டில் நிகழ்ந்த சம்பவம் என்று சரியான விவரம் தெரியவில்லை. இதில், பெருக்கெடுத்து ஓடும் நீரில் பந்து ஒன்று விழுந்துவிடுகிறது. இந்த பந்தை எடுக்க ஒரு சிறுமி தவழ்ந்து செல்கிறாள்.

நீரில் இறங்கப் போன சிறுமியை திடீரென அவளது வளர்ப்பு நாய் பின்பகுதியில் இருந்து ஓடிவந்து, உடையை கவ்வி பிடித்து இழுக்கிறது. சிறுமியை பின்னால் இழுத்து கீழே தள்ளிய நாய், பிறகு, நீருக்குள் இறங்கி பந்தை கவ்வி எடுத்துக் கொண்டு வெளியே ஓடிவந்து, பந்தை சிறுமியிடம் தருகிறது.

இந்த காட்சி, நாய் நன்றியுள்ளது, என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது. பலரும் சென்டிமென்ட் அடிப்படையில் இதனை வைரலாக ஷேர் செய்துவருகின்றனர்.