ஆந்திரா டூ கேரளா..! 500கிமீ..! சபரி மலைக்கு பாத யாத்திரை வரும் தெரு நாய்! பக்தர்கள் பரவசம்!

ஆந்திர மாநிலம் திருமலையிலிருந்து பாதயாத்திரையாக வரும் ஐயப்ப பக்தர்களை பின்தொடர்ந்து 500 கிலோ மீட்டர் வரை பயணித்த நாய்! இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக ஐயப்பனை தரிசிக்க கிளம்பியுள்ளனர்.அப்போது அவர்களை பின்தொடர்ந்து நாய் ஒன்று வந்துள்ளது .இந்நிலையில் முதலில் நாயை கண்டுகொள்ளாது பக்தர்கள் தங்களது பாத யாத்திரையைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஒரு நாய் தங்களை பின்தொடர்வதை அறிந்த பக்தர்கள் முதலில் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். பிறகு தங்களது பாதயாத்திரையை தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்ற பிறகு ஓய்வெடுப்பதற்காக அங்கே அமைக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் இடத்தில் தங்கியுள்ளனர்.

பின்னர் நீண்ட நாட்களாகியும் நாய் அவர்களை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் பகுதிகளில் சமைத்து அந்த நாய்க்கும் உணவளித்து வந்தனர். இதையடுத்து அந்த நாய் நன்றியுடன் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளது. இந்நிலையில் 13 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சுமார் 480 கிலோமீட்டர் கடந்த நிலையில் நாய் அவர்களை பின் தொடர்ந்து வரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஐயப்ப பக்தர்களிடம் கேட்டபோது முதலில் நாய் தங்களை பின் தொடர்வதை கவனிக்காமல் நீண்டதூரம் சென்று விட்டதாகவும் இரவு ஒரு நாள் ஓய்வு எடுக்கையில் நாயும் தங்களுடன் ஓய்வெடுத்து மறுநாள் பாதயாத்திரையை தொடங்கும்போது நாயும் பின்தொடர்ந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதயாத்திரையாக பல வருடம் சென்று வந்தாலும் இந்த வருடம் நாயுடன் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.