எஜமானரை காப்பாற்ற புலியுடன் சண்டை! இரண்டு புலிகளை தெறித்து ஓட வைத்த வீர நாய்!

தனது எஜமானர்களை காப்பாற்ற, புலியுடன் தைரியமாக சண்டை போட்ட பாசக்கார நாய் ஒன்றை பற்றிய செய்திதான் இது.


இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தி விவரம் பின்வருமாறு: மத்தியப் பிரதேச மாநிலம், கன்ஹா வனப்பகுதியில், குஞ்சிராம் யாதவ் என்பவருக்குச் சொந்தமான பசு மாடு காணாமல் போய் விட்டது. இதைத் தேடி, குஞ்சிராம் யாதவ், தனது மனைவி பூல்வாட்டி உடன், நேற்று மாலை (மார்ச் 31) சென்றுள்ளார். 

காட்டுக்குள் நீண்ட நேரம் அவர்கள் பசுமாட்டை தேடியலைந்தபோது, ஒரு இடத்தில், 2 புலிகள், காட்டு விலங்கு ஒன்றை அடித்து, தின்றுகொண்டிருந்தன. உடனே, இவர்களை பார்த்ததும் அந்த புலிகள், கடுமையான உறுமியபடி, கடிப்பதுபோல அருகே வந்துள்ளன. இதன்போது, குஞ்சிராமின் நாய், அவர்களுடன் சென்றுள்ளது.

அந்த நாய், இந்த சம்பவத்தைப் பார்த்ததும், உடனடியாக,தனது எஜமானர்களை பாதுகாக்க, உயிரை பொருட்படுத்தாமல் முன்னே வந்து, புலியைதடுத்துள்ளது. இது மட்டுமின்றி, புலியை பார்த்து, குஞ்சிராமின் வளர்ப்பு நாய் ஆக்ரோஷமாக குரைக்க, புலிகளுக்கு,புதுமையான சத்தம் என்பதால், ஒன்றும் புரியாமல் சில நிமிடம் மல்லுக்கட்டிய நிலையில், நாயை விட்டுவிட்டு,பின்வாங்கி ஓடிவிட்டன.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குஞ்சிராம், அவரது மனைவி மற்றும் வளர்ப்புநாய் 3 பேரும் உயிருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதில், அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. கன்ஹா வனத்துறை அதிகாரிகள், இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர். தைரியமாக, உயிரை பணயம் வைத்து, எஜமானர்களை காப்பாற்றிய நாயை பலரும் பாராட்டி வருகின்றனர்.