அடேங்கப்பா, காங்கிரஸ்க்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறதா..? மாட்டிக்கொண்டு விழிக்கும் ஸ்டாலின்.

சட்டசபைத் தேர்தலுக்கு கொடுக்கும் சீட்களை வாங்கிக்கொண்டு காங்கிரஸ் அமைதியாக இருக்கும் என்றுதான் ஸ்டாலின் நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால், இப்போது வேறுதிசையில் காங்கிரஸ் பயணிக்கிறதாம்.


ஆம், காங்கிரஸ் கட்சிக்கு 13% வாக்குவங்கி இருக்கிறது என்று சமீபத்தில் மக்கள் மத்தியில் எடுத்த கருத்துக்கணிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பை தி.மு.க.வின் பிரசாந்த் கிஷோர் டீம்தான் எடுத்திருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களைப் பொறுத்த வரையிலும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கும் அமோக ஆதரவு இருக்கிறதாம். ஐந்து சதவிகிதம் என்று கணக்கிடப்பட்ட காங்கிரஸ் வாக்குவங்கி திடீரென 13 சதவிகிதமாக உயர்ந்தது எப்படி என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்.

இப்போது இத்தனை சதவிகிதம் வாங்குவங்கி இருப்பதால், கூடுதல் சீட் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுளதாக தவிக்கிறார் ஸ்டாலின். திடீரென எப்படி வாக்கு வங்கி உயர்ந்தது என்பது பிரசாந்த் கிஷோருக்கு மட்டுமே வெளிச்சம்.