குருமூர்த்தியை கைது செய்யும் ஆண்மை அ.தி.மு.க.வுக்கு இருக்கிறதா?

பத்திரிகையாசிரியர் சோ ஒரே நேரத்தில் எல்லா கட்சி ஆட்களுக்கும் நண்பராக இருந்தவர், அதே நேரம் ஜெயலலிதாவின் அரசியல் குருவாக இருந்தவர்.


அவர் பாணியில் இப்போது துக்ளக் பத்திரிக்கைக்கு ஆசிரியராக வந்திருக்கும் குருமூர்த்தி, துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அரசியல் குருவாக இருந்து வருகிறார்.

பத்திரிகை ஆசிரியர் என்ற தெனாவெட்டு, பா.ஜ.க. கொடுக்கும் தைரியம், மத்திய அரசு கொடுத்திருக்கும் ரிசர்வ் வங்கி பதவி போன்றவை கையில் வைத்துக்கொண்டு, பன்னீருக்கு ஆண்மை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதனை அமைச்சர்கள் ஜெயக்குமாரும், செல்லூர் ராஜூவும் கடுமையாக எதிர்த்தனர்.

உடனே தான் என்ன சொன்னேன் என்பதை மாற்றியிருக்கிறார் குருமூர்த்தி. ஆம், ஆண்மை இருக்கிறதா என்று குருமூர்த்தி கேட்டது பன்னீர் செல்வத்தைப் பார்த்து இல்லையாம். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் பார்த்து ஆண்மையைப் பற்றி கேள்வி எழுப்பினாராம்.

இதைக் கேட்டதும் அ.தி.மு.க. அமைதியாகப் போவதுதான் வேடிக்கை. ஒருத்தரை சொன்னதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம், இப்படி ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் நக்கல் செய்திருக்கும் நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க. அரசை நாம் என்னதான் சொல்ல முடியும்?