மதுரையில் பயஙகரம்! ரத்த தானம் செய்ய வந்தவரின் கிட்னியை திருடிய டாக்டர்கள்!

தனது உறவினருக்காக ரத்தம் கொடுக்க வந்த நண்பனின் கிட்னியை மருத்துவர்கள் உதவியுடன் திருடிய நபர் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை ஒத்தக் கடையைச் சேர்ந்தவர் முகமது பக்ருதீன், தனது தாய் ஷகிலா பானு மற்றும் சகோதர சகோதரிகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஃபக்ருதீனுடன் ஏற்கனவே அறிமுகமுள்ள ராஜா முகமது என்பவர் தனது சகோதரியின் மகன் அசாருதீனுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவருக்க்கு ரத்தம் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்று பக்ருதீன் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அசாருதீன் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் பக்ருதீனுக்கு ரத்தம் சார்ந்த நோய் இருப்பதாகவும், மருத்துவமனையில் சில நாட்கள் தங்கினால் சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதற்க் ஒப்புக்கொண்ட பக்ருதீன் தனது தாயார் ஷகீலா பானுவை உதவிக்கு வைத்துக்கொண்டு மருத்துவமனையில் தங்கினார். இந்நிலையில் பக்ருதீனுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரது ஒரு கிட்னியை திருடி அசாருதீனுக்கு பொறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனைத் தெரிந்துகொண்ட ஷகிலா பானு உடனடியாக காவல் நிலையத்துக்குச் சென்று ராஜா முகமது மீது புகார் அளித்தார். ஆனால் ராஜ முகமது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஷகீலா பானு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி தொடர்புடைய குற்றவாளிகள் மீது வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.