வயிற்றுக்குள் 800 பொருட்கள்! ஆப்பரேசன் செய்த டாக்டர்களை மிரள வைத்த நபர்!

ஜெய்ப்பூர்: மனநலம் பாதித்தவரின் வயிற்றில் கிடந்த பொருட்களை பார்த்து டாக்டர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரை சேர்ந்த மனநலம் பாதித்த ஒருவருக்கு, கடும் வயிற்றுவலி வந்துள்ளது. இதன்பேரில், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கே ஸ்கேன் செய்து பார்த்ததில், அந்த நபரின் வயிற்றில் ஒரே
குப்பை போல, இரும்பு ஆணிகள், சாவிகள், நாணயங்கள், துருப்பிடித்த செயின்கள் என  சுமார் 800 கிராம் எடையுள்ள பொருட்கள் கிடந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்ததும் டாக்டர்களே அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அந்த நபருக்கு, 4 பேர் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்து, அவரது வயிற்றில் இருந்த இரும்புப் பொருட்களை  வெளியே எடுத்தனர். காய்லான் கடை போல கிடந்த நோயாளியின் வயிறு தற்போது சுத்தமாகியுள்ளதாகவும்,
டாக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது மருத்துவத் துறையில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகளில் முக்கியமானதாக, கருதப்படுகிறது. இவ்வளவு இரும்புப் பொருட்களுடன் அந்த நபர் எப்படி இவ்வளவு நாட்கள் உயிரோடு நடமாடினர் என்பது வியப்பாக உள்ளதாக, மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.