இளைஞன் காதுக்குள் கூடு கட்டி குட்டி போட்ட சிலந்தி! டாக்டர்களையே அதிர வைத்த சம்பவம்!

இளைஞரின் காதுக்குள் கூடு கட்டிய சிலந்தியை மருத்துவர்கள் சிகிச்சை மூலம் அகற்றினர்.


ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ. 20 வயது இளைஞரான லீயின் பிரச்சினை அரிதானது. தொடர் காது வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற அவர் காதின் உள்பகுதி வெகுவாக வலிப்பதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். காதுக்குள் ஏதோ ஊர்வது போன்ற உணர்வும் அரிப்பும் ஏற்படுவதாகவும் கூறினார். 

இதையடுத்து மைக்ரோஸ்கோப் கருவி மூலம், லீயின் காதுகளை ஆய்வு செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லீயின் காதுக்குள்  ஒரு சிலந்தி கூடு கட்டிக்கொண்டு உயிருடன் இருந்தது தெரிய வந்தது. மேலும் அது குட்டி வேறு போட்டிருந்தது. இதனை பார்த்து டாக்டர்களே ஒரு கனம் அதிர்ந்து போயினர். எனினும் உரிய நேரத்தில் வந்ததால் செவிதிறன் பாதுகாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எளியமுறையில் உப்புகலந்த நீரை காதில் ஊற்றி வெற்றிகரமாக சிலந்தியை மருத்துவர்கள் வெளியேற்றினர். கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் முதியவர் ஒருவரின் கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது 15 செண்டிமீட்ட நீள புழு ஒன்று எடுக்கப்பட்டது. அந்த செய்தி அப்பொழுது வைரலாக பரவிய நிலையில் தற்போது சீன இளைஞரின் காதில் சிலந்தி இருந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.