நர்சுடன் பைக்கில் அதிவேகம்! சாலை தடுப்புச் சுவறில் மோதிய டாக்டருக்கு நேர்ந்த பரிதாபம்! வேலூர் கோரம்!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த செவிலியர் படுகாயம் அடைந்தார்.


நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவர் பெனடிக் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருடன் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  

தேசிய நெடுஞ்சாலையில் வெங்கிலி என்ற இடம் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது அதிவேகமாக மோதியது. இதில் மருத்துவர் பெனடிக்கும், செவிலியரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற ஆம்பூர் போலீசார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பெனடிக் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் விபத்தில் சிக்கிய செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல போராட்டங்களுக்கு பின்னர்தான் பல பேருக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது. வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருந்திருந்தால் ஒரு நல்ல மருத்துவமனை சமூக இழந்திருக்காது. பெனடிக்கால் இன்னும் எத்தனை நோயாளிகளோ காப்பற்றப்பட வேண்டிய நிலையில் பெனடிக் உயிரிழந்தது நமக்கு பெரிய இழப்புதான்.