வேற ஜாதி பெண்களை கல்யாணம் செய்யாதீங்க! தேவேந்திர குல வேளாளார் இளைஞர்களுக்கு கிருஷ்ணசாமி வேண்டுகோள்!

வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டி இருப்பதால் வேறு சாதி பெண்களை திருமணம் செய்து கொள்ளவேண்டாம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அவரது கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ராமநாதபுரம் பரமக்குடி அருகே இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கிருஷ்ணசாமி, வேறு ஜாதி பெண்கள் உங்களை விரும்பினால் கூட நீங்கள் ஒதுங்கி விடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். 

அது மட்டுமின்றி கிருஷ்ணசாமியின் மகனான ஷ்யாம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’இம்மானுவேல் ராமநாதபுரத்தில் மறைந்த மாவீரன் மட்டுமல்ல, இந்த உலகமே புகழும் ஒரு வீரனாகவே கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். தியாகி இம்மானுவேல் சேகரனார் விதைக்கப்பட்ட மண்ணிலிருந்து எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற சபதம் எடுத்தோம்.

பிற்படுத்தப்பட்டர்கள் எல்லாம் ஒரே சாதியாகப் பார்க்கப்படுவதில்லை. இட ஒதுக்கீட்டை அனுபவித்தாலும் வெளியே வன்னியர், தேவர், நாடார் என கௌரவமாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், எஸ்.சி. அனைவரும் ஒரே சாதியினராக பார்க்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9ஆம் தேதி இமானுவேல் சேகரன் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் போராளியாக விளங்கிய இமானுவேல் சேகரன், இன்றளவும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரது உடல் மறைந்தாலும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக எழுப்பிய குரல் காலந்தோறும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்