2013ல் கொடூரமாக கொலை செய்யப்பட்ட டாக்டர்! அவரது மனைவிக்கு தற்போது ஏற்பட்ட விபரீதம்! பதற வைக்கும் சம்பவம்!

சென்னையில் 2013ல் கொல்லப்பட்ட பிரபல டாக்டர் மனைவியை தற்போது கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த மருத்துவர் சுப்பையா சென்னை அரசு மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் அபிராமபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் வசித்து வந்த சுப்பையாக வீட்டிற்கு செல்வதற்காக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து காரில் செல்ல முயற்சித்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்ட தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுப்பையா சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பின்னர் சுப்பையா கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து அபிராமபுரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் காணிமடத்தை சேர்ந்த பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் டாக்டர் சுப்பையாவுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பிரச்சனை இருந்ததால் கொலை சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

வழக்கில் பொன்னுசாமியின் மகனான உயர்நீதிமன்ற வக்கீல் பாசீல் மற்றும் மற்றொரு மகன் போரீஸ் ஆகியோர் சரணடைந்தனர். பின்னர் பொன்னுசாமி மனைவி புஷ்பம் கைது செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடையதாக டாக்டர் ஜேம்ஸ் மற்றும் கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்தனர். 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பொன்னுசாமியின் மகன் வழக்கறிஞர் வில்லியம்ஸ் மூலம் அறிமுகமான டாக்டர் ஜேம்ஸிடம் சுப்பையாவை கொன்றுவிட்டால் பல கோடி ரூபாய் சொத்து கிடைக்கும் என்றும் அதில் பாதி தருவதாகவும் ஆசை காட்டியுள்ளார்.

பாசில் கூறியதை நம்பி புனிதமான மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுவந்த திருநெல்வேலி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை டாக்டர் ஜேம்சும் சுப்பையாவை கொல்ல சதிதீட்டம் தீட்டியது தெரியவந்தது.

இந்நிலையில் கொலை நடந்து 6 வருடங்களுக்கு பின்னர் சென்னை பிஷப் கார்டனில் வசித்து வரும் சுப்பையாவின் மனைவி சாந்திக்கு நேற்று வெளிநாட்டில் இருந்து ஒரு மர்மநபர்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில் ஒரிரு தினங்களில் கொன்றுவிடுவேன் எனக் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் வெளிநாட்டில் இருந்து பேசியது யார்? எந்த நாட்டில் இருந்து போன் வந்தது, சொத்துக்காக உறவினர்கள் யாரேனும் போன் செய்தார்களா என விசாரித்து வருகின்றனர்.