22 வயசு தான்..! டாக்டர் அஸ்வினி செய்த மகத்தான சாதனை..! ஊரே கூடி வாழ்த்திய பெருமை! என்ன தெரியுமா?

திருவள்ளூர்: கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் டாக்டர், தனது கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.


தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 2 லட்சத்திற்கும் மேலானோர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். முன்பைவிட இளைஞர்கள் அதிகளவில் போட்டியிட்டதைக் காண முடிந்தது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அஸ்வினி சுகுமாரன் என்ற இளம்பெண் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.  

22 வயதாகும் அஸ்வினி, டாக்டர் படிப்பு படித்துள்ளார். பதவி ஏற்றுக் கொண்ட இவர் கூறுகையில், ''எனக்கு கிடைத்துள்ள கவுன்சிலர் பொறுப்பை உரிய முறையில் பயன்படுத்தி, மக்களுக்குச் சேவை வழங்குவேன்.

எனது ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தி, மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க வழி செய்வேன். இதுதவிர, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவும், இ-சேவை மையம் நிறுவவும் நடவடிக்கை எடுப்பேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.