பழம் பெரும் பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி தம் அடிச்சி பார்த்து இருக்கீங்களா?

மறைந்த இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றாலே தழையதழைய பட்டுப்புடவையும், நெற்ரி நிறைய குங்குமமும், அவரது இசையும்தான் ஞாபகத்துக்கு வரும்.


அதேபோன்று பரதநாட்டிய மேதை பாலசரஸ்வதியும் அத்தனை தூரம் புடவை கலாசாரத்தைப் போற்றி பாதுகாத்தவர்கள்.ஆனால், அவர்களும் இளமைக் காலத்தில் இன்றைய இளம் பெண்கள் போன்று லூட்டியடித்தவர்கள் என்பதற்கு ஆதாரமாக புகைப்படங்கள் கிடைத்திருக்கின்றன.

பரதநாட்டியக் கலைஞர் பாலசரஸ்வதி பற்றி அவரது மருமகன் டக்ளஸ் எம்.நைட் ஜூனியர் எழுதியிருக்கும் புத்தகத்தில்தான் இந்த அரிய புகைப்படம் காணப்படுகிறது. மிகவும் கட்டுப்பாடுடன் வளர்க்கப்பட்ட இரு பெரும் மேதைகளும், யாருக்கும் தெரியாமல் மேற்கத்திய உடைகள் அணிந்து, சிகரெட் குடிப்பது போன்று புகைப்படம் எடுத்திருக்கிறார்கள் என எழுதியிருக்கிறார். 

இனிமேல் உங்களுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றாலே, அவர் சிகரெட் குடிக்கும் படம் ஞாபகத்துக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.